மினி ஸ்டேடியத்தில் ஆய்வு

காரைக்குடி; காரைக்குடி என்.ஜி.ஓ., காலனியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மினி ஸ்டேடியம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த மினி ஸ்டேடியத்தில் உயரம் மற்றும் நீளம் தாண்டும் இடங்களில் ஆற்று மணலுக்கு பதில், எம்சாண்ட், கிரஷர் மணல் கொட்டப்பட்டிருந்தது. பெற்றோர்கள் புகார் எழுப்பினர். தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

அதனைத் தொடர்ந்து, மினி ஸ்டேடியத்தை இளைஞர் நலன் மற்றும்விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கூடுதல்தலைமை செயலர் அதுல்யா மிஸ்ரா நேற்று ஆய்வு செய்தார்.

சப்கலெக்டர் ஆயுஸ் வெங்கட், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், தாசில்தார் ராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Advertisement