1,000 மீனவ மகளிருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
தமிழகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நீர்நிலைகளில், மீன் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில், 12,355 ஏக்கர் ஊராட்சிக் குளங்களில், ெஹக்டேருக்கு 2,000 மீன் குஞ்சுகள் வீதம், ஒரு கோடி மீன் குஞ்சுகள், 7.5 லட்சம் ரூபாய் செலவில் வளர்க்கப்படும்
பெருகிவரும் அலங்கார மீன் தேவையை நிறைவு செய்து, அதன் வாயிலாக வேலை வாய்ப்பை உருவாக்க, 56 வண்ண மீன் வளர்ப்பு அலகுகள் அமைக்க, 1.55 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்
மீன் குஞ்சு உற்பத்தி, தீவிர மீன் வளர்ப்பு முறைகள், மதிப்புக் கூட்டுதல் ஆகிய நவீன தொழில்நுட்பங்களில், 1,000 மீனவ மகளிருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், 38 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்
மீன் வளர்ப்பு, கடற்பாசி வளர்ப்பு, மீன் வியாபாரம் போன்ற சுயதொழில்களை மேற்கொள்ள, 10,000 மீனவர்களுக்கு விவசாய கடன் அட்டைகள் வழங்கப்படும். இதன் வாயிலாக, ஊரகப்பகுதிகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.