மணல் திருட்டைnதடுக்க வழக்கு

திண்டுக்கல் ; திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி பாண்டி யோகேஸ்வரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:டி.புதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்டது தெத்துப்பட்டி. இங்குள்ள குளத்தை நம்பி விவசாயம் நடக்கிறது. குடிநீராதாரமாக உள்ளது. அனுமதியின்றி சட்டவிரோதமாக குளத்திலிருந்து லாரிகள் மூலம் சிலர் மணல் அள்ளுகின்றனர். தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும்.

கலெக்டர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், திண்டுக்கல் மேற்கு தாசில்தாருக்கு புகார் அனுப்பினேன். மணல் அள்ள தடைவிதிக்க வேண்டும். சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை அதிகாரிகள் 12 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement