பள்ளி மாணவர்களுக்கு கூல்லிப்: கடைக்கு சீல்

திண்டுக்கல்,; ஆத்துாரில் பள்ளி மாணவர்களுக்கு 'கூல்லிப்'விற்பனை செய்த கடைக்காரரை உணவுத்துறை அதிகாரிகள் பிடித்து கடைக்கு சீல் வைத்தனர்.

ஆத்துார் மாலப்பட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் மெஹ்ராஜ். அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்துகிறார். இதன் அருகில் பள்ளியும் செயல்படுகிறது. கடையில் 'கூல்லிப்'எனும் புகையிலை பொருளை யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்தார். பள்ளி நிர்வாகத்தினர் திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணியிடம் புகாரளித்தனர். உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கூல்லிப்'புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் போது பிடித்தனர். இதையடுத்து அவரது கடைக்கு சீல் வைத்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Advertisement