அண்ணணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த தங்கை கைது

தேனி:தேனியில் ஓய்வூதியர் முருகன் 60, என்பவரின் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி ரூ. 5.04 லட்சத்தை மோசடியாக எடுத்த தங்கை செல்வியை போலீசார் கைது செய்தனர்.

தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முருகன். அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். உடல்நிலைக்குறைவால் அவதிப்பட்டார். இவரது சகோதரி செல்வி 50,போடியில் வசித்து காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த நவம்பரில் முருகன் உடல் நிலை பாதிப்படைந்ததால் அவரை தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் செல்வி சிகிச்சைக்கு சேர்த்தார்.பின் அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

கைது



இதனிடையே முருகன் வீட்டிற்கு வந்த செல்வி அங்கிருந்த அவரின் ஏ.டி.எம்., கார்டை எடுத்து சென்றார். முருகனின் அனுமதி இல்லாமல் 2024 நவ., டிசம்பரில் தேனி, மதுரை மாவட்டங்களில் பல ஏ.டி.எம்.,களில் மொத்தம் ரூ. 5.04 லட்சத்தை எடுத்தார். தங்கை பண மோசடி செய்ததை முருகன் கண்டறிந்து அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார். செல்வியை போலீசார் கைது செய்தனர்.

Advertisement