குரூப்-4 தேர்வில் வெற்றி8 பேருக்கு பணி ஆணை
குரூப்-4 தேர்வில் வெற்றி8 பேருக்கு பணி ஆணை
நாமக்கல்:தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், 2024 ஜூனில், குரூப்--4 போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. அதில், தேர்ச்சி பெற்ற பணி நாடுனர்களில், பள்ளி கல்வித்துறையில் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு, நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், இளநிலை உதவியாளர் பணிக்கான கவுன்சிலிங், நேற்று நடந்தது.
இதில், எட்டு பேர் பங்கேற்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை கல்வி) சிவா, கவுன்சிலிங்கை நடத்தினார். அவற்றில், வெண்ணந்துார் வட்டார கல்வி அலுவலகத்தில் காலியாக இருந்த பணியிடத்தை, ஒருவர் தேர்வு செய்தார். மீதமுள்ள, ஏழு பேர், பக்கத்து மாவட்டங்களில், பணியிடங்களை தேர்வு செய்தனர். அவர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய மாணவிக்கு விசா ரத்து: அமெரிக்காவிலிருந்து வெளியேறினார்
-
மன அழுத்தத்தை போக்க உதவும் சாதனம்
-
குருவாயூர் கோவில் மேல்சாந்தி தேர்வு
-
கூகுள் 'குரோம் பிரவுசர்' பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
-
கோயில் நிதியில் 'ரிசார்ட்' கட்டும் திட்டம் நிறுத்தம் ஐகோர்ட்டில் அரசு தகவல்
-
பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறையை பின்பற்றுமா உயர்கல்வி துறை?
Advertisement
Advertisement