ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டம்ஏப்ரல் 1ல் சோதனை ஓட்டம்
ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டம்ஏப்ரல் 1ல் சோதனை ஓட்டம்
ராசிபுரம்:ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டப்பணி, 854.37 கோடி ரூபாயில் நடந்து வருகிறது. இதை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
ராசிபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 854 கோடி ரூபாயில், கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கான நிதியை, தமிழக அரசு ஒதுக்கியது. ராசிபுரம் நகராட்சி, ராசிபுரம், புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்துார் ஆகிய, நான்கு ஊராட்சி ஒன்றியங்கள், நாமகிரிப்பேட்டை பட்டணம், சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி, பிள்ளாநல்லுார், வெண்ணந்துார், அத்தனுார், மல்லசமுத்திரம் ஆகிய, எட்டு டவுன் பஞ்சாயத்துகள் என, மொத்தம், 523 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நாளொன்றுக்கு, 76.14 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும். தற்போது, 98 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. ஏப்., 1ல் சோதனை ஓட்டம்
நடக்கிறது. சோதனை ஓட்ட காலத்தில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பின், முற்றிலுமாக களையப்பட்டு பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இந்தாண்டு இறுதிக்குள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ராசிபுரம் சேர்மன் கவிதா, அட்மா குழு தலைவர் ஜெகநாதன், குடிநீர் வடிவால் வாரிய மேற்பார்வை பொறியாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
இந்திய மாணவிக்கு விசா ரத்து: அமெரிக்காவிலிருந்து வெளியேறினார்
-
மன அழுத்தத்தை போக்க உதவும் சாதனம்
-
குருவாயூர் கோவில் மேல்சாந்தி தேர்வு
-
கூகுள் 'குரோம் பிரவுசர்' பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
-
கோயில் நிதியில் 'ரிசார்ட்' கட்டும் திட்டம் நிறுத்தம் ஐகோர்ட்டில் அரசு தகவல்
-
பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறையை பின்பற்றுமா உயர்கல்வி துறை?