மியாவாக்கி காடுகள் உருவாக்கும் விழா
மியாவாக்கி காடுகள் உருவாக்கும் விழா
நாமக்கல்:நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், 'மியாவாக்கி காடுகள்' உருவாக்கும் விழா நேற்று நடந்தது.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, கல்வி மற்றும் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் வரவேற்றார். பவுல்டரி டவுன் ரோட்டரி சங்க தலைவர் பிரபாகரன், இன்னர்வீல் சங்க தலைவி புவனேஸ்வரி, நாமக்கல் மாநகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் கலாநிதி, ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுனர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் பேசுகையில், ''மியாவாக்கி காடுகள், மூன்றுக்கு, மூன்று அடியில், நாட்டு தாவர இனங்களை அடர்த்தியாக நட்டு அடர்வனத்தை உருவாக்கும் முறை. நெருக்கமாக தாவரங்களை நடுவதால் உணவு தயாரிக்க, சூரிய ஒளியின் தேவைக்காக அவைகள் போட்டி போட்டுக்கொண்டு வேகமாக வளர்கின்றன. பல்வேறு இலையடுக்குகள் உருவாவதால், காட்டின் ஈரம் ஆவியாகாமல் தடுக்கப்படுகிறது.
தாவரங்களின் வேர்கள் நெருக்கமாக வளர்ந்து, நிலத்தின் ஈரம் காக்கப்படுகிறது. இதனால், மண்ணின் வளம் அதிகரிக்கும். அதிகப்படியான கரியமிலவாயு ஒளிச்சேர்க்கைக்காக உறிஞ்சப்படுவதால், வளிமண்டலத்தில் வெப்பம் குறையும்.
இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, 48 இன மரங்களை நட்டு, மேயர் கலாநிதி தொடங்கி வைத்தார். நாமக்கல், சேலம், கரூர், திருச்சி மாவட்டங்
களிலிருந்து, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
இந்திய மாணவிக்கு விசா ரத்து: அமெரிக்காவிலிருந்து வெளியேறினார்
-
மன அழுத்தத்தை போக்க உதவும் சாதனம்
-
குருவாயூர் கோவில் மேல்சாந்தி தேர்வு
-
கூகுள் 'குரோம் பிரவுசர்' பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
-
கோயில் நிதியில் 'ரிசார்ட்' கட்டும் திட்டம் நிறுத்தம் ஐகோர்ட்டில் அரசு தகவல்
-
பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறையை பின்பற்றுமா உயர்கல்வி துறை?