மரவள்ளி விலை சரிவு: விவசாயிகள் கவலை
மரவள்ளி விலை சரிவு: விவசாயிகள் கவலை
ராசிபுரம்:தமிழகத்தில், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, விழுப்புரம், ஈரோடு ஆகிய, எட்டு மாவட்டங்களில், 15 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில், மரவள்ளி சாகுபடி செய்யப்படுகிறது. விளையும் கிழங்குகளை, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள, 350 சேகோ ஆலைகளில் கிழங்கு மாவாகவும், சில ஆலைகளில் ஜவ்வரிசியாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழத்தின் விவசாய தொழில்களில் சேகோ ஆலைகளும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஜவ்வரிசி நல்ல விலைக்கு விற்றால் தான், மரவள்ளிக்கு கூடுதல் விலை கிடைக்கும். ஜவ்வரிசி, மாவு விற்பனை குறைந்தால் மரவள்ளி விலையையும் குறைத்துவிடுவர்.
தற்போது, ஜவ்வரிசி, 100 கிலோ மூட்டை, 600 ரூபாய் வரை குறைந்துள்ளது. 3,700 ரூபாய்க்கு விற்ற ஜவ்வரிசி மூட்டை, தற்போது, 3,200 ரூபாய்க்கு விற்கிறது. கிழங்கு மாவு மூட்டைக்கு, 400 ரூபாய் குறைந்து, 2,400 ரூபாய்க்கு விற்கிறது. இதனால், மரவள்ளி விலையும் சரிந்துள்ளது.
பாயின்ட், 260 ரூபாய் முதல், 280 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கிய சேகோ தொழிற்சாலைகள், தற்போது, 220 ரூபாயில் இருந்து, 250 வரை மட்டுமே நிர்ணயித்துள்ளன. இதனால், மரவள்ளி மூட்டை, 300 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்கின்றன. இந்த விலைக்கு விற்றால், மரவள்ளி கிழங்குக்கு செய்த செலவு கூட முழுவதும் கிடைக்காது என்றும், ஏக்கருக்கு, 5,000 ரூபாய் வரை இழப்பு ஏற்படும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
மேலும்
-
இந்திய மாணவிக்கு விசா ரத்து: அமெரிக்காவிலிருந்து வெளியேறினார்
-
மன அழுத்தத்தை போக்க உதவும் சாதனம்
-
குருவாயூர் கோவில் மேல்சாந்தி தேர்வு
-
கூகுள் 'குரோம் பிரவுசர்' பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
-
கோயில் நிதியில் 'ரிசார்ட்' கட்டும் திட்டம் நிறுத்தம் ஐகோர்ட்டில் அரசு தகவல்
-
பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறையை பின்பற்றுமா உயர்கல்வி துறை?