தி.மு.க., மருத்துவர் அணி சார்பில்சமூகநீதி, பகுத்தறிவு பாசறை கூட்டம்
தி.மு.க., மருத்துவர் அணி சார்பில்சமூகநீதி, பகுத்தறிவு பாசறை கூட்டம்
நாமக்கல்:சேலம் மண்டல, தி.மு.க., மருத்துவர் அணி சார்பில், சமூகநீதி மற்றும் பகுத்தறிவு பாசறை கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. எம்.பி., கனிமொழி சோமு, மாநில மருத்துவர் அணி செயலாளர் எழிலன் நாகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் தீபக்குமார் வரவேற்றார். நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., தலைமை வகித்து பேசியதாவது:
லோக்சபா தேர்தலில், டாக்டர் அம்பேத்கர், பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை அளிக்கும் சட்டத்தை கொண்டு வந்தார். ஆனால், அந்த சட்டம் தோற்கடிக்கப்பட்டது. அந்த சட்டத்தை, தமிழக சட்டசபையில் நிறைவேற்றியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தற்போது, தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. நாங்கள் ஹிந்திக்கு எதிரி அல்ல. ஹிந்தியை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்பதை தான் எதிர்க்கிறோம். எந்த மொழியாக இருந்தாலும், அதை கற்பது அவரவர் உரிமை. மொழி தான் இனத்தின் அடையாளம். மொழி அழிந்தால் இனமே அழிந்து விடும். எனவே, தமிழகத்தில் தி.மு.க., இருக்கும் வரை ஹிந்தி திணிப்பு நடக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மூர்த்தி, மாநகராட்சி மேயர் கலாநிதி, சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
இந்திய மாணவிக்கு விசா ரத்து: அமெரிக்காவிலிருந்து வெளியேறினார்
-
மன அழுத்தத்தை போக்க உதவும் சாதனம்
-
குருவாயூர் கோவில் மேல்சாந்தி தேர்வு
-
கூகுள் 'குரோம் பிரவுசர்' பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
-
கோயில் நிதியில் 'ரிசார்ட்' கட்டும் திட்டம் நிறுத்தம் ஐகோர்ட்டில் அரசு தகவல்
-
பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறையை பின்பற்றுமா உயர்கல்வி துறை?