அரசு கல்லுாரியில்ஆண்டு விழா

அரசு கல்லுாரியில்ஆண்டு விழா


நாமக்கல்:நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில், கல்லுாரி ஆண்டு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார். முன்னாள் கணிதத்துறை தலைவர் சிவகாமி பங்கேற்றார். விழாவில், பாடங்களில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவியருக்கும், கல்லுாரி நுண்கலை மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும், அறக்கட்டளை சார்பில் நினைவு பரிசும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கல்லுாரி பேரவை நிறைவு விழா, பத்து மாணவ அலுவலக பொறுப்பாளர்களுக்கு முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினரால் சிறப்பு செய்யப்பட்டது. முடிவில் மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement