நீரில் மூழ்கி சாலை துண்டிப்பு: எச்சரிக்கை பலகை இல்லை




நீரில் மூழ்கி சாலை துண்டிப்பு: எச்சரிக்கை பலகை இல்லை


ராசிபுரம்:நாமக்கல் மாவட்டத்தில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடர் மழை பெய்தது. முக்கியமாக, ராசிபுரம் அதன் சுற்று வட்டார பகுதியில் காற்றுடன் கனமழை பெய்ததால், நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கியது. தொடர் மழையால், அணைப்பாளயம் ஏரியை ஒட்டியுள்ள சி.எஸ்.புரம், காட்டூர், அணைப்பாளையம் கிராமத்து சாலைகள் நீரில் மூழ்கின. ராசிபுரத்தில் இருந்து காட்டூர் வழியாக அணைப்பாளையம் செல்லும் இந்த சாலையை ஒட்டி ஏரி உள்ளது. 500 மீட்டர் துாரத்திற்கு சாலை முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளது.
இதனால், இந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இவ்வழியாக செல்ல வேண்டாம் என ஊராட்சி சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தது. தற்போது, எச்சரிக்கை பலகை இல்லாததால், புதிதாக இவ்வழியாக வருபவர்கள் உள்ளே சென்று தண்ணீரை பார்த்துவிட்டு திரும்பி வருகின்றனர். எனவே, தண்ணீர் வற்றும் வரை சாலை துவக்கத்திலேயே மீண்டும் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement