மதுராந்தகம் ஆலையில் 4,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே தனியார் அரிசி ஆலையில் இருந்து 4,000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
மதுராந்தகம் -- திருக்கழுக்குன்றம் நெடுஞ்சாலையில், மேலவலம் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா அரிசி ஆலையில், ரேஷன் அரிசை பாலீஷ் செய்து, விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருப்பதாக, குடிமைபொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி நேற்று வெங்கடேஸ்வரா அரிசி ஆலையில், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை துணை கண்காணிப்பாளர் சரவணகுமார் தலைமையிலான அதிகாரிகள், நேற்று சோதனை செய்தனர்.
அதில், 50 கிலோ எடை கொண்ட 80 மூட்டைகளில் இருந்த 4,000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். ஆலையின் உரிமையாளர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய மாணவிக்கு விசா ரத்து: அமெரிக்காவிலிருந்து வெளியேறினார்
-
மன அழுத்தத்தை போக்க உதவும் சாதனம்
-
குருவாயூர் கோவில் மேல்சாந்தி தேர்வு
-
கூகுள் 'குரோம் பிரவுசர்' பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
-
கோயில் நிதியில் 'ரிசார்ட்' கட்டும் திட்டம் நிறுத்தம் ஐகோர்ட்டில் அரசு தகவல்
-
பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறையை பின்பற்றுமா உயர்கல்வி துறை?
Advertisement
Advertisement