அண்ணனை துண்டு துண்டாக வெட்டிய தம்பி மீது பாய்ந்தது 'குண்டாஸ்' சட்டம்

அண்ணனை துண்டு துண்டாக வெட்டிய தம்பி மீது பாய்ந்தது 'குண்டாஸ்' சட்டம்


அவிநாசி:அவிநாசி, மாமரத் தோட்டம் பகுதியில் வசிப்பவர் ரமேஷ், 43. கருவலுார் அருகே காளிபாளையம் பகுதியில் வசித்தவர் கோவிந்தசாமி, 54; இருவரும் உறவு முறையில் அண்ணன், தம்பி ஆகின்றனர். கடந்த பிப்.,20ம் தேதி கோவிந்தசாமியை காணவில்லை என அவரது மகன் பிரவீன் குமார் அவிநாசி போலீஸில் புகார் அளித்தார்.
போலீசாரின் தீவிர விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் சொத்து தகராறு குறித்து பேசிய போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோவிந்தசாமியை, ரமேஷ் பலமாக தாக்கி கீழே தள்ளியுள்ளார். அதில் தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்தார். உடலை கருவலுார் அருகே அனந்தகிரியில் தனக்கு சொந்தமான தோட்டத்து கோழிப்பண்ணையில் வைத்து தனித்தனியாக வெட்டி வெவ்வேறு பகுதியில் வீசினார்.
இதில் தொரவலுார் குளத்தில் இருந்து உடல் பகுதியும் ரமேஷின் தோட்டத்து கிணற்றில் தலை, அருகேயுள்ள பகுதிகளில் உடல் பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. ரமேஷ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ரமேைஷ குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி., பரிந்துரைத்தார். இதை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஏற்றதால், ரமேஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

* ஈரோடு மாவட்டம் அந்தியூரில் கால்நடை சந்தை நேற்று நடந்தது. இதில் அந்தியூர், கோபி, அத்தாணி, வெள்ளித்திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஜெர்சி இன மாடுகள், ௩,௦௦௦ ரூபாய் முதல், 52 ஆயிரம் ரூபாய்; எருமை, ௩,௦௦௦ ரூபாய் முதல், 55 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள், 90 லட்சம் ரூபாய்க்கு விற்றன. ஈரோடு, கோபி, அந்தியூர் மற்றும் கேரளா, கர்நாடகா மாநில வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
* கோபி அருகே மொடச்சூரில், பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனைக்கான வாரச்சந்தை நேற்று கூடியது. துவரம் பருப்பு (கிலோ), 120 ரூபாய், குண்டு உளுந்து, பச்சை பயிர், பாசிப்பருப்பு, தலா 130 ரூபாய், கடலைப்பருப்பு மற்றும் கடுகு, தலா 120 ரூபாய், சீரகம், 360, கொள்ளு, 70, தட்டைப்பயிர், 110, கருப்பு சுண்டல், 90, வெள்ளை சுண்டல், 100, மிளகு, 800, புளி, 150, பூண்டு, 120, வெந்தயம் மற்றும் பொட்டுக்கடலை, தலா 100 ரூபாய்க்கும் விற்பனையானது.
* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 342 மூட்டை எள் விற்பனைக்கு வரத்தானது. கருப்பு ரகம் கிலோ, 12௫ ரூபாய் முதல் 179 ரூபாய்; சிவப்பு ரகம், 11௧ ரூபாய் முதல் 14௫ ரூபாய்; வெள்ளை ரகம், 11௭ ரூபாய் முதல் 131.90 ரூபாய் வரை, 25,436 கிலோ எள், 37 லட்சத்து, 75,288 ரூபாய்க்கு விற்பனையானது.
* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 2,070 மூட்டைகளில், 87 ஆயிரம் கிலோ கொப்பரை வரத்தானது. முதல் தரம் கிலோ, 146.55 ரூபாய் முதல் 165.09 ரூபாய்; இரண்டாம் தரம், 51.59 ரூபாய் முதல் 161.28 ரூபாய் வரை, ௧.௩௨ கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
* சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று, 30 கிலோ எடை கொண்ட, 2,100 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை, 1,250 முதல், 1,350 ரூபாய்; உருண்டை வெல்லம், 2,600 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,380 முதல், 1,470 ரூபாய்; அச்சு வெல்லம், 300 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,430 முதல், 1,470 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் வரத்து அதிகரித்து மூட்டைக்கு, 30 ரூபாய் விலை உயர்ந்தது.
* பவானி அருகே மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வேளாண் விளைபொருட்கள் ஏலம் நேற்று நடந்தது. இதில் வெள்ளை ரக எள் கிலோ, 108.89 - 143.72 ரூபாய்; கறுப்பு ரகம், கிலோ, 123.96 - 161.89 ரூபாய் வரை, 2,856 கிலோ வரத்தாகி, 4 லட்சம் ரூபாய்க்கு விற்றது. இதேபோல், 4,௦௦௦ தேங்காய் வரத்தாகி, கிலோ, 14.69 - 26.69 ரூபாய் வரை விற்றது. தேங்காய் பருப்பு, 10 மூட்டை வரத்தாகி, கிலோ, 125.33 - 151.16 ரூபாய் வரை விலை போனது.
* கவுந்தப்பாடி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்துக்கான ஏலம் நேற்று நடந்தது. நாட்டு சர்க்கரை முதல் தரம் (திடம்), 60 கிலோ மூட்டை, 2,740 ரூபாய் முதல், 2,760 ரூபாய் வரை விற்பனையானது. இரண்டாம் தரம் (மீடியம்) 2,610 ரூபாய் முதல், 2,680 ரூபாய் வரை விற்றது. வரத்தான 1,927 மூட்டைகளும், 51.40 லட்சம் ரூபாய்க்கு விற்றது. அதேபோல் உருண்டை வெல்லம், 40 மூட்டை (30 கிலோ) வரத்தானது. ஒரு மூட்டை, 1,650 ரூபாய் விலையில் அனைத்து மூட்டைகளும், 66 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்தை, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம், 52 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்தது.
* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 9,312 தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன. ஒரு கிலோ தேங்காய், 34.69 முதல், 68.20 ரூபாய் வரையிலான விலையில், 2,979 கிலோ தேங்காய், 1.௭௭ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் விற்பனைக்கூடத்தில் நேற்று வாழை ஏலம் நடந்தது. கதலி ரகம் கிலோ, 50 ரூபாய்; நேந்திரம் கிலோ, 48 ரூபாய்க்கு விற்றது. பூவன் தார், 380 ரூபாய்; செவ்வாழை தார், ௧,350; ரஸ்தாளி, 640; தேன்வாழை, ௫80 ரூபாய்க்கு விற்றது.

Advertisement