செங்கோட்டையனுக்கு கோரிக்கை விடுத்துகோபியில் ஒட்டிய போஸ்டர்களால் பரபர
செங்கோட்டையனுக்கு கோரிக்கை விடுத்துகோபியில் ஒட்டிய போஸ்டர்களால் பரபர
கோபி:செங்கோட்டையன் எம்.எல்.ஏ.,க்கு, கோரிக்கை விடுத்து கோபியில் நேற்று பல இடங்களில் ஒட்டப்பட்ட போஸ்டர், மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோபி நகர பகுதியில், நேற்று பல்வேறு இடங்களில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் 'திராவிடர் இயக்கத்தால் 50 ஆண்டுகாலம், பதவி, பலன் பெற்று இனப்பகைவர்களுடன் கூட்டணி அமைக்கும் விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கக்கூடாது என அன்புடன் கோருகிறோம்' என குறிப்பிடப்பட்டிருந்தது. பஸ் ஸ்டாண்ட், சிக்னல் பகுதி, புதுப்பாளையம், கரட்டூர் பகுதிகளில் ஒட்டியிருந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போஸ்டர் ஒட்டிய, மனிதம் சட்ட உதவி மய்யத்தின் நிறுவனரும், திராவிடர் கழக கோபி மாவட்ட தலைவருமான சென்னியப்பன் கூறியதாவது:
அகில இந்திய அளவில் ஒப்பிடுகையில், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட கட்டமைப்புகள், தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சியில் தான் நடந்துள்ளது. திராவிட கட்சியில்தான் பல ஆண்டுகளாக முன்னாள் அமைச்சராகவும், தற்போது எம்.எல்.ஏ.,வாகவும் செங்கோட்டையன் உள்ளார். ஆனால், திராவிட கட்சியை ஒழிப்பேன் எனக்கூறும் சீமான் போன்றோர் பங்கேற்கும் மேடையில் செங்கோட்டையன் பங்கேற்கக்கூடாது என்று கோருகிறோம். இதில் பங்கேற்பதை அவர் கைவிட வேண்டும். இதை வலியுறுத்தியே போஸ்டர்கள் ஒட்டினோம். இவ்வாறு கூறினார். இதேபோல்
நம்பியூர் பகுதிகளிலும் இதே போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.சென்னையில் நேற்று நடந்த கூட்டத்தில், செங்கோட்டையன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பேசினார்.
மேலும்
-
இந்திய மாணவிக்கு விசா ரத்து: அமெரிக்காவிலிருந்து வெளியேறினார்
-
மன அழுத்தத்தை போக்க உதவும் சாதனம்
-
குருவாயூர் கோவில் மேல்சாந்தி தேர்வு
-
கூகுள் 'குரோம் பிரவுசர்' பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
-
கோயில் நிதியில் 'ரிசார்ட்' கட்டும் திட்டம் நிறுத்தம் ஐகோர்ட்டில் அரசு தகவல்
-
பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறையை பின்பற்றுமா உயர்கல்வி துறை?