அகற்றிய இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு

அலங்காநல்லுார்; அலங்காநல்லுார் மெயின் ரோட்டில் அகற்றிய இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு தொடர்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இங்குள்ள ஐயப்பன் கோயிலில் இருந்து கேட்கடை முன்புள்ள பாசன கால்வாய் வரை ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பாதித்தது. இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை 2022 டிசம்பரில் இயந்திரம் மூலம் நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சியால் அகற்றப்பட்டது.
அதற்கான செலவினங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் வசூலித்ததாக தெரியவில்லை. இந்த மெயின் ரோட்டில் பழமையான கால்வாய் மீது கட்டியிருந்த கட்டடங்கள் அகற்றப்படவில்லை. இதனால் அதிகாரிகள் பாரபட்சமாக செயல்பட்டதாக புகார் எழுந்தது. மிகவும் குறுகிய இந்த ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் மீண்டும் புதிய கட்டுமானங்களால் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.
இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே மீண்டும் போக்குவரத்து இடையூறு அதிகரித்துள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றுகையில் நன்கு வளர்ந்த மரங்களையும் அகற்றிய அதிகாரிகள், இன்று ஆக்கிரமிப்பை தடுக்க முன் வரவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும்
-
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உடல்நலக்குறைவு
-
20 ஆண்டுகள் சிவகங்கையில் கொத்தடிமை வாழ்க்கை; மகளைக் கண்டதும் கண்ணீர் விட்டு கதறிய தந்தை
-
அமெரிக்காவில் ஒரே நேரத்தில் சூறாவளி, காட்டுத்தீ; 26 பேர் பரிதாப பலி
-
வளர்ச்சியை நோக்கி இந்தியா, சீனா; உலக நாடுகளில் பொருளாதார பின்னடைவுக்கு வாய்ப்பு: ஐ.நா., அறிக்கை
-
டிராக்டர் மோதி வாலிபர் பலி
-
சதுரங்க வேட்டை சினிமா பாணியில் மோசடி செய்த 4 பேர் அதிரடி கைது