பலன்தராத, வெற்று அறிவிப்பு வேளாண் பட்ஜெட்

கோடை உழவு மானியம் போதாது



திருப்பதி, கள்ளந்திரி: தேர்தல் அறிக்கையில் சொன்னபடி குறைந்தபட்ச ஆதாரவிலை தரவில்லை. நான்காண்டுகளுக்கு முன்பு சொன்ன நெல்லுக்கு கிலோ ரூ.25 என்ற விலையேஇப்போது தான் எட்டியுள்ளது. கரும்பு விலை இன்னும் உயரவே இல்லை. டிராக்டர், சொட்டு நீர்ப்பாசனத்திற்கான கருவிகளை மானியத்தில் வாங்குவதற்கு அரசுகுறிப்பிட்டுள்ள சில கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தான் வாங்க முடியும். விவசாயிகள் நேரடியாக வாங்கமுடியாது.

மதுரை கீழக்கரையில் ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு ஒதுக்கிய நிதியைஅலங்காநல்லுார் சர்க்கரை ஆலை திறப்பதற்கு ஒதுக்கியிருந்தால் கரும்பு விவசாயிகள் பயன்பெற்றிருக்கலாம். கோடை உழவுக்கு மானியம்தருவதற்கு ரூ.ஒரு கோடி தான் நிதி ஒதுக்கியுள்ளனர். மாவட்ட அளவில் நுாறு ஏக்கர் வரை கூடவிவசாயிகளுக்கு பயன் கிடைக்காது.

கண்மாய்களை துார்வார நிதியில்லை



பார்த்தசாரதி, சோழவந்தான்: வாய்க்கால்களை சீரமைப்பதற்காக நிதி ஒதுக்கியுள்ளனர். அதை ஊரக வளர்ச்சித்துறை செயல்படுத்துவதில்எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நீர்வளத்துறைக்கு மாற்றினால் நல்லது. கண்மாய்களை துார்வார நிதி ஒதுக்கவில்லை. விதைகள் உற்பத்தியை கூட்டுறவுத்துறைமூலம் விநியோகிக்க ஏற்பாடு செய்வது நல்ல நடவடிக்கை. விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள அரசு உதவாதது வருத்தம் அளிக்கிறது.நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைக்கவில்லை. நெல் கொள்முதல் மையங்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. வைகை அணைதுார்வாருவது பற்றி தெரிவிக்கவில்லை.

முன்மாதிரி திட்டங்கள்



மாரிச்சாமி, மாடக்குளம்: நெல், கரும்பு, காய்கறி என ஒவ்வொரு விவசாயத்திற்கும் திட்டமிட்டு தனியாக நிதி ஒதுக்கி சலுகை வழங்கி அனைத்து விவசாயிகளையும் ஊக்கப்படுத்தும்வகையில் உள்ளது. தரிசு நிலத்தில் நெல் சாகுபடியை அதிகப்படுத்தும் திட்டம் வரவேற்கத்தக்கது. நுாறு விவசாயிகளை வெளிநாடுகளுக்கு விவசாய சுற்றுலாஅழைத்துச் செல்வது முன்மாதிரியான திட்டம். வெங்காய விவசாயிகளுக்காக புதிய குடோவுன் அமைப்பது, மானிய விலையில் சோலார் பம்ப் செட் வழங்குவதுஎன இந்த பட்ஜெட் சிறந்த பட்ஜெட் ஆக அமைந்துள்ளது.

கேலிக்கூத்தான அறிவிப்பு



அருண், கொட்டாம்பட்டி: கடந்தாண்டை விட ரூ.3380 கோடி அதிகம் என்பதைத் தாண்டி வேளாண் பட்ஜெட்டில் விசேஷம் இல்லை. கருத்துக்கேட்பு கூட்டத்தின் போது எட்டு தென்மாவட்டவிவசாயிகள் மதுரையில் வேளாண் பல்கலை அமைக்க வேண்டும் என தெரிவித்தனர். அமைச்சர் கே.என்.நேருவும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வோம்என்று வாக்குறுதி அளித்தார். கடைசியில் வெற்று அறிவிப்பாகி விட்டது. நீர்நிலைகளை துார்வாரி சுத்தம் செய்ய நிதி ஒதுக்காமல் மீன்வளர்க்க நிதி ஒதுக்குவதுகேலிக்கூத்தாக உள்ளது. டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டத்திற்கு ரூ.102 கோடி ஒதுக்கியது போதாது.

விவசாயிகளா, கட்சிக்காரர்களா



ராமன், செல்லம்பட்டி: தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில் அவர்கள் உற்பத்தி செய்யும் தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகளில் விற்பதற்கு அரசு ஏற்கனவேதெரிவித்திருந்தும் அதைப்பற்றி குறிப்பிடவில்லை. தமிழகத்தில் உள்ள 100 திறந்தவெளி கிணறுகளை புனரமைக்க 50 சதவீத மானியம் என்ற பெயரில் நிதிஒதுக்கீடு என்பது வெறும் அறிவிப்பு தான். மாவட்டத்திற்கு இரண்டு கிணறுகளை புனரமைப்பதற்கு எதற்காக பட்ஜெட்டில் பெருமையாக அறிவிக்க வேண்டும்.வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதை வரவேற்கிறோம். ஆனால் யாரை அழைத்துச் செல்வார்கள் என்பதை வெளிப்படைத்தன்மையாக அறிவிக்கவேண்டும். கட்சிக்காரர்களை விவசாயி என்ற போர்வையில் அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.

மனஉளைச்சல் தரும் பட்ஜெட்



மணிகண்டன், உசிலம்பட்டி: கருத்து கேட்பு கூட்டத்திலேயே உண்மையான விவசாயிகளை அழைத்து கருத்து கேட்கவில்லை, அதற்கேற்ப வேளாண் பட்ஜெட்டும் கண்துடைப்பாக உள்ளது.தேசிய வங்கிகளில் விவசாயத்திற்காக நகைக்கடன் அடகு வைத்து ஓராண்டில் மீட்க முடியாவிட்டால் வட்டியை மட்டும் கட்டி புதுப்பித்து வந்தோம். இப்போதுகடனை முழுவதும் அடைத்து ஒருநாள் கழித்து புதிதாக நகைக்கடன் பெறவேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழக அரசு எதிர்வினையாற்றவில்லை.விளைச்சல் பாதிக்கப்படும் போது கடனை கட்டமுடியாமல் தனியாரிடம் கந்துவட்டிக்கு வாங்கத்துாண்டும் இந்த நடைமுறைக்கு அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்கவேண்டும். இந்த பட்ஜெட் மனஉளைச்சலை தான் ஏற்படுத்தியுள்ளது.

பலன்தராத பட்ஜெட்



பழனிசாமி, மேலுார்: அலங்காநல்லுார், தர்மபுரி, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை திறக்க இதுவரை அறிவிப்பு வரவில்லை. கரும்பு விவசாயிகளுக்குடன்னுக்கு ரூ.349 தருவது என்பது கண்துடைப்பான விஷயம். மற்ற மாநிலங்களில் கரும்புக்கு டன்னுக்கு ரூ.4000 தாண்டி வழங்கப்படுகிறது. விவசாயக்கடன்கள்தள்ளுபடி செய்யவில்லை. தமிழகத்தில் ஆண்டுதோறும் சாகுபடி பரப்பு குறைந்து கொண்டு வருகிறது. புதிய கால்வாய் நீட்டிப்பு திட்டம் அறிவித்தால் தான்பாசனப்பரப்பு அதிகரிக்கும். அதற்கான திட்டம் எதுவும் இல்லை. விவசாயிகளுக்குபலன்தராத பட்ஜெட் இது.

எம்.எஸ்.பி., விலை நிர்ணயிக்கவில்லை



முத்துமீரான், பேரையூர்:

கடந்தாண்டுமக்காச்சோளத்திற்கு உரியவிலை கிடைக்கவில்லை. மற்ற பயிர்களுக்கு கொள்முதல் மையம் அமைத்ததைப் போல மக்காச்சோளத்திற்கும் குறைந்த பட்சவிலையை நிர்ணயித்து அரசே கொள்முதல் மையம் அமைக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரை அமல்படுத்தப்படும் என எதிர்பார்த்து ஏமாந்துவிட்டோம். காய்கறி முதல் அனைத்து தானியங்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தை அறிவிக்கவேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Advertisement