போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

கடலுார் : குள்ளஞ்சாவடி அடுத்த சின்னகாட்டுசாகை கிராமத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது.

எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கி, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். பின், அவர் பேசுகையில், 'போதை தனிமனிதனிடம் துவங்கி குடும்பத்துக்கு செல்கிறது. பின் சமூகத்துக்கு சென்று நாட்டை பாதிக்கிறது. எதிர்கால இந்தியாவை செம்மைப்படுத்தும் ஆற்றல் இளைஞர்கள் கையில் உள்ளது.

சமூக விரோதிகளால் இளைய சமூதாயம் தவறான போதை பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். இளைஞர்களை நல்வழிப்படுத்தவே விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார். டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement