டியாகோ என்.ஆர்.ஜி., டாடாவின் 'கிராசோவர் ஹேட்ச்பேக்'

1

'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், 'டியாகோ என்.ஆர்.ஜி.,' கிராசோவர் ஹேட்ச்பேக் காரை மேம்படுத்தி அறிமுகப்படுத்தி உள்ளது. பெட்ரோல் சி.என்.ஜி., வகையிலும், மேனுவல், ஆட்டோ கியர்பாக்ஸ் வகையிலும் வரும் இந்த கார், உயர்ந்த விலை 'எகஸ்.இசட்.,' மாடலில் மட்டுமே வருகிறது.

சாதாரண டியாகோ காருடன் ஒப்பிடுகையில், மேம்படுத்தப்பட்ட முன்புற மற்றும் பின்புற பம்பர்கள், 181 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ், வெள்ளி நிற ஸ்கிட் பிளேட்கள், பக்கவாட்டில் கருப்பு நிற பிளாஸ்டிக் கிளாடிங், 15 அங்குல அலாய் மற்றும் ஸ்டீல் சக்கரங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

அம்சங்களை பொறுத்த அளவில், 10.25 அங்குல இன்போடெயின்மென்ட் அமைப்பு, ஒயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, பின்புற கேமரா, ஆட்டோ ஹெட் லைட்டுகள் மற்றும் வைப்பர்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை உள்ளன. எல்.இ.டி., லைட்டுகள், பாக் லைட்டுகள், ஆட்டோ ஏ.வி., இடம்பெறவில்லை.


விபரக்குறிப்பு



இன்ஜின் - 1.2 லிட்டர், 3 சிலிண்டர், ரெவோட்ரான் பெட்ரோல்

பவர் - 86 ஹெச்.பி.,

டார்க் - 113 என்.எம்.,

பூட் ஸ்பேஸ் - 242 லிட்டர்

மைலேஜ் - 21 கி.மீ., ( 27 கி.மீ., சி.என்.ஜி.,)


விலை: ரூ.7.2 - 8.75 லட்சம்

Advertisement