பூமி திரும்பிய சுனிதாவை வாழ்த்தி வரவேற்றது இஸ்ரோ!

2


புதுடில்லி: விண்வெளியில் இருந்து பூமி திரும்பிய நாசா வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்க்கு இஸ்ரோ சார்பில், அதன் தலைவர் நாராயணன் வரவேற்பும் வாழ்த்தும் தெரிவித்து உள்ளார்.


அவர் சமூக வலைதளத்தில், வெளியிட்டுள்ள கூறியிருப்பதாவது: welcome back சுனிதா வில்லியம்ஸ். விண்வெளி மையத்தில் இருந்து நீண்ட பயணத்திற்குப் பிறகு நீங்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. நாசா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக்கான அர்ப்பணிப்புக்கு ஒரு சான்று. உங்கள் அர்ப்பணிப்பு உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆர்வலர்களை தொடர்ந்து ஊக்குவிக்கிறது.


இஸ்ரோ தலைவர் என்ற முறையில், எனது சக ஊழியர்களின் சார்பாக நான் உங்களுக்கு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி தலைமையில், இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கில் பாடுபடும் போது, ​​விண்வெளி ஆராய்ச்சியில் உங்கள் நிபுணத்துவத்தைப் பயன்படுத்த விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement