விண்வெளி To பூமி; பயணத்தை தொடங்கிய சுனிதாவின் புதிய வீடியோவை வெளியிட்ட நாசா

வாஷிங்டன்; சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலமாக பூமிக்கு சுனிதா வில்லியம்ஸ் தமது குழுவினருடன் புறப்பட்டார்.
@1brஅமெரிக்க விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு செய்ய கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி சென்றனர். அவர்களின் பயணம் 10 நாளாக முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறால் கடந்த 10 மாதங்களாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. அவர்களை அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் மூலம் விண்வெளி வீரர்கள் குழு சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றது.
இந் நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலமாக பூமிக்கு சுனிதா வில்லியம்ஸ் தமது குழுவினருடன் புறப்பட்டார். இந்திய நேரப்படி நாளை (மார்ச் 19) அதிகாலை 3.27 மணிக்கு அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் தரையிறங்குகின்றனர். இதன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவினரின் 9 மாத பயணம் முடிவுக்கு வருகிறது.
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோருடன் நிக் ஹாவுக், ரஷ்யாவின் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோரும் பூமிக்கு திரும்புகின்றனர். பயணம் தொடங்கி உள்ள நிலையில், அங்கு நடக்கும் நிகழ்வுகளை நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
அந்த வகையில், சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் பூமி திரும்புவதற்கான பயண ஏற்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பான வீடியோவை நாசா வெளியிட்டு உள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விடுவிக்கப்படும் காட்சி. பூமிக்கு வந்துசேரும் காட்சிகள் அனைத்தையும் நாசா நேரடி ஒளிபரப்பு செய்வது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (2)
Sureshkumar - Coimbatore,இந்தியா
18 மார்,2025 - 15:54 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
18 மார்,2025 - 11:46 Report Abuse

0
0
Reply
மேலும்
-
தமிழகத்தில் 59 சதவீத எம்.எல்.ஏ.,க்கள் மீது கிரிமினல் வழக்குகள்: ஆய்வில் அம்பலமான முக்கிய தகவல்
-
சட்டம் - ஒழுங்கு எங்கே இருக்கிறது: தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை: சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் மோடி கடிதம்
-
100 நாள் வேலைத்திட்ட சம்பளம்: அதிகரிக்க சோனியா வலியுறுத்தல்
-
இளையராஜாவுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி!
-
பல்லடத்தில் 3 பேர் கொடூர கொலை வழக்கு; சி.பி.சி.ஐ.,டிக்கு மாற்றம்
Advertisement
Advertisement