மஹா கும்பமேளாவின் வெற்றியில் அனைவருக்கும் பங்கு: லோக்சபாவில் பிரதமர் மோடி உரை

புதுடில்லி: மஹா கும்பமேளாவின் வெற்றியில் அனைவருடைய பங்கும் அடங்கி இருக்கிறது என லோக்சபாவில் பிரதமர் மோடி பேசினார்.
மஹா கும்பமேளா நிகழ்ச்சி குறித்து லோக்சபாவில் பிரதமர் மோடி பேசியதாவது: பிரயாக்ராஜில் நடந்த மஹா கும்பமேளாவின் வெற்றிக்கு பங்களித்த கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். கும்ப மேளாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த வெற்றியில் அனைவரின் பங்கும் அடங்கி இருக்கிறது. அரசு, சமுதாயம், மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என அனைவரின் பங்கும் உள்ளது.
மிகப்பெரிய இலக்குகள்
கங்கா தேவியை பூமிக்கு கொண்டு வருவதற்கு பகீரத மன்னன் முயற்சி மேற்கொண்டது நாம் எல்லோருக்கும் நன்கு தெரியும். மிகப்பெரிய இலக்குகளை நோக்கிய தேசிய நலனின் அடையாளமாக மஹா கும்பமேளா விளங்கியது. நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சியாக மஹா கும்பமேளா நடைபெற்றது. உத்தர பிரதேச மக்கள் மற்றும் பிரயாக்ராஜ் பகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
அடுத்த தலைமுறை
கடந்தாண்டு அயோத்தியில் ராமரின் பிரம்மாண்ட பிரதிஷ்டை நடைபெற்றது. நமது திறன்கள் குறித்து மக்கள் மனதில் உள்ள சந்தேகங்களுக்கு மஹா கும்பமேளா பதில் அளித்துள்ளது. மஹா கும்பமேளாவின் பிரம்மாண்ட அற்புதத்திற்கு ஒட்டுமொத்த உலகமும் சாட்சியாக விளங்குகிறது. அடுத்த தலைமுறைக்கு இந்த கும்பமேளா ஒரு பெரும் உதாரணமாக திகழும். அது தேசத்திற்கு புதிய திசையும் வழங்கி உள்ளது.
தேசிய உணர்வு
உயர்ந்து வரும் இந்தியாவின் உணர்வுகளை மஹா கும்பமேளா பிரதிபலித்தது. இந்தியாவின் புதிய தலைமுறை, பாரம்பரியங்களையும், நம்பிக்கையையும் பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறது. இந்தியாவின் மகத்துவத்தை கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் பார்த்தது. ஒரு தேசிய உணர்வை கண்டோம். இது புதிய சாதனைகளுக்கு ஊக்கமளிக்கும். இது நமது பலத்தை சந்தேகிப்பவர்களுக்கு பதிலடியை கொடுத்தது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
எதிர்க்கட்சிகள் அமளி
மஹா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், அதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். இதனால் லோக்சபாவில் கூச்சல், குழப்பம் நிலவியது. கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.
மேலும்
-
தமிழகத்தில் 59 சதவீத எம்.எல்.ஏ.,க்கள் மீது கிரிமினல் வழக்குகள்: ஆய்வில் அம்பலமான முக்கிய தகவல்
-
சட்டம் - ஒழுங்கு எங்கே இருக்கிறது: தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை: சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் மோடி கடிதம்
-
100 நாள் வேலைத்திட்ட சம்பளம்: அதிகரிக்க சோனியா வலியுறுத்தல்
-
இளையராஜாவுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி!
-
பல்லடத்தில் 3 பேர் கொடூர கொலை வழக்கு; சி.பி.சி.ஐ.,டிக்கு மாற்றம்