மும்மொழிக் கல்வியை அரசு பள்ளியிலும் கொண்டு வருவோம்: உறுதியாக சொல்கிறார் அண்ணாமலை!

சென்னை: சமக்கல்வியான மும்மொழிக் கல்வியை, நம் குழந்தைகள் பயிலும் தமிழக அரசுப் பள்ளிகளிலும் கொண்டு வருவோம் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சமக்கல்வி எங்கள் உரிமை' என்னும் இயக்கத்தை தமிழக பா.ஜ., துவக்கியுள்ளது. இதில், மும்மொழி கொள்கை வேண்டும் என ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறப்பட உள்ளது. இது குறித்து இன்று அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்ற வித்தியாசமின்றி, ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றி, அனைத்துக் குழந்தைகளுக்கும், தரமான, சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக பா.ஜ., சமக்கல்வி கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்தது.
ஒரு கோடி பேர் கையெழுத்து என்ற இலக்கு வைத்துத் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், தமிழக மக்கள் பேராதரவுடன், களத்திலும், இணைய தளம் வழியாகவும் சேர்த்து, 20 லட்சம் என்ற இலக்கை எட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழக மக்கள் அன்புடனும் ஆதரவுடனும், விரைவில் ஒரு கோடி கையெழுத்து என்ற இலக்கை எட்டுவோம். சமக்கல்வியான மும்மொழிக் கல்வியை, நம்
குழந்தைகள் பயிலும் தமிழக அரசுப் பள்ளிகளிலும் கொண்டு வருவோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


















மேலும்
-
ஐ.எஸ்.ஐ., உரிமமின்றி அலாய் வீல் தயாரிப்பு தொழிற்சாலையில் சோதனை
-
லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
-
சாலை வளைவுகளில் கட்டுப்பாடு தேவை
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வை இழந்த வாலிபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்
-
பெருங்குடியில் ஜெமினி சர்க்கஸ் துவக்கம்
-
ஒரகடம் மேம்பால சாலை சேதம் தொடரும் போக்குவரத்து நெரிசல்