சாலை வளைவுகளில் கட்டுப்பாடு தேவை

கப்பாங்கோட்டூர்:மதுரமங்கலம் அடுத்த, எடையார்பாக்கம் கூட்டு சாலையில் இருந்து, கண்டிவாக்கம் கிராமம் வழியாக, கப்பாங்கோட்டூர் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது.

இந்த சாலையில், ஐந்திற்கும் மேற்பட்ட அபாயகரமான வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில், போதிய எச்சரிக்கை பலகை மற்றும் வேகத்தடைகளும் இல்லை.

சமீபத்தில், எடையார்பாக்கம் கூட்டு சாலை முதல், கப்பாங்கோட்டூர் சாலை வரையில், புதிதாக சாலை போட்டுள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்கின்றனர்.

இதனால், சாலை வளைவுகளில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது. எனவே, எடையார்பாக்கம் கூட்டு சாலை முதல் கப்பாங்கோட்டூர் இடையே வளைவுகளில் எச்சரிக்கை பலகை மற்றும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement