ஐ.எஸ்.ஐ., உரிமமின்றி அலாய் வீல் தயாரிப்பு தொழிற்சாலையில் சோதனை
ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம், வல்லம் வடகால் சிப்காட் தொழில் பூங்காவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில், ஐ.எஸ்.ஐ., உரிமம் இன்றி, அலுமினிய அலாய் வீல் தயாரிப்பு நடப்பதாக, பி.ஐ.எஸ்., என்ற இந்திய தர நிர்ணய ஆணையத்திற்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, பி.ஐ.எஸ்., இணை இயக்குநர்கள் அருண் புச்சகாயாலா, ஸ்ரீஜித் மோகன் உள்ளிட்ட குழுவினர், நேற்று முன்தினம், தொழிற்சாலையில் திடீர் சோதனை நடத்தினர்.
அதில், தரக்கட்டுப்பாட்டு உத்தரவை மீறி, அலுமினியம் மற்றும் அலுமினிய உலோகக் கலவைகள் பயன்படுத்தி, ஐ.எஸ்.ஐ., முத்திரையின்றி, அலுமினிய அலாய் வீல் தயாரிப்பது தெரிய வந்தது. நிறுவனம் மீது சட்டரீதியான நடவடிக்கைக்கு, அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். குற்றம் நிரூபணமானால், இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது உற்பத்தி பொருட்களின் மதிப்பில், 10 சதவீதம் வரை அபராதம் விதிக்க முடியும் என, பி.ஐ.எஸ்., அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
படகு கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி; ஒருவரை தேடும் பணி தீவிரம்
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வை இழந்த வாலிபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்
-
லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
தி.மு.க., மாஜி எம்.பி.,யின் பி.ஏ., கொடூர கொலை; நில அபகரிப்பு கும்பலில் மூவர் கைது
-
சென்னையில் விதி மீறி கட்டிய 10 மாடி கட்டடம்; இடித்து அகற்ற சி.எம்.டி.ஏ., முடிவு