மீன் கடைகளில்அதிகாரிகள் ஆய்வு


மீன் கடைகளில்அதிகாரிகள் ஆய்வு


நாமக்கல்:கடையில் மீன் சாப்பிட்ட குழந்தைகளுக்கு, உடல்நல குறைவு ஏற்பட்டதால், அனைத்து மீன் கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
நாமக்கல்லில் உள்ள மீன்கடை ஒன்றில் மீன் சாப்பிட்ட, இரு குழந்தைகளுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அருண் தலைமையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், மீன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.
மேலும், நாமக்கல்--சேந்தமங்கலம் சாலையில் உள்ள மீன் சப்ளை செய்யும் கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மொத்தம், 11 மீன்கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில், தரம் குறைந்த இரண்டு கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. அது தொடர்பாக கடைகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. தொடர் கண்காணிப்பில் மீன் கடைகள் வைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement