டெஸ்லா கார்களை சேதப்படுத்தினால் 20 ஆண்டு சிறை; டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவில் டெஸ்லா கார்களை சேதப்படுத்தினால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் டெஸ்லா கார்களுக்கும், கார் சேவை மையங்களுக்கும் தீ வைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு அரங்கேறி வருகிறது. இந்த சம்பவங்களை விசாரித்து வரும் அமெரிக்கா எப்.பி.ஐ., அதிகாரிகள், சில பயங்கரவாத சக்திகளின் பங்கு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த டெஸ்லா தலைமை செயல் நிர்வாகி எலான் மஸ்க், இதனை பயங்கரவாதம் என்று குறிப்பிட்டு இருந்தார். இது போன்ற வன்முறைகள் முட்டாள்தனமானது மற்றும் மிகவும் தவறானது என்று எலான் மஸ்க் காட்டமாக கூறி இருந்தார். இந்நிலையில், டெஸ்லா கார்களை சேதப்படுத்தினால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டெஸ்லா கார்களை நாசவேலை செய்யும் போது பிடிபடும் நபர்கள் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம். அதில் தாக்குதல்களுக்கு பின்னணியில் இருந்து நிதியளிப்பவர்களும் அடங்குவர், நாங்கள் உங்களை தேடுகிறோம். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார். டெஸ்லா கார்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.










மேலும்
-
லோக்சபா ஒத்திவைப்பு; ராஜ்யசபாவில் ஜக்தீப் தன்கர் வெளிநடப்பு
-
மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவு!
-
திட்டமிட்டு அவையில் இருந்து வெளியேற்றினார்: சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
அன்றே சொன்னேன்... இன்று இ.பி.எஸ்., ரூட்டு மாறிட்டார்: துணை முதல்வர் உதயநிதி
-
கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலை ஜூன் 1ல் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைப்பு!
-
கோவையில் ரூ.54 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்; போலீஸ் எஸ்.ஐ., மகன் உட்பட 7 பேர் கைது