கிராம பகுதிகளில் தனியாக வசிக்கும் முதியவர்கள் குறித்து கணக்கெடுப்பு


கிராம பகுதிகளில் தனியாக வசிக்கும் முதியவர்கள் குறித்து கணக்கெடுப்பு


புதுச்சத்திரம்:நாமக்கல் மாவட்டத்தில், கிராம பகுதிகளில் தனியாக வசிக்கும் முதியவர்களை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளைம், திருச்செங்கோடு, பரமத்தி வேலுார் பகுதிகளில் இரவு நேரங்களில் தனியாக வசிக்கும், வயதான முதியவர்களை கண்டறிந்து அவர்களை கொலை செய்து விட்டு, நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்வது அதிகரித்து வருகிறது. இதனால், கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில், ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் எல்லையிலும் கிராமம், நகர் பகுதியில் தனியாக வசிக்கும் முதியவர்களை கண்காணிக்க எஸ்.பி., ராஜேஸ்கண்ணா உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, முதியவர்கள் எத்தனை பேர் தனியாக வசிக்கின்றனர் என்பது குறித்து, போலீசார் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். அதன்பின், இரவு ரோந்து பணியில் உள்ள போலீசாரிடம், பட்டியலை வழங்கி கண்காணிக்க உத்தரவிடப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement