பல்லடத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

10


திருப்பூர்: பல்லடம் அருகே சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவுக்குட்பட்ட கே.அய்யம்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ரேவதி,44. இவரிடம் சொத்து மதிப்பு சான்றிதழ் வேண்டி பல்லடம் ஊராட்சி ஒன்றி ய அலுவலக ஒப்பந்ததாரர் கதிர்வேல் என்பவர் விண்ணப்பித்துள்ளார். இதனை பெற்ற வி.ஏ.ஓ., ரேவதி, சான்றிதழ் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஆனால், லஞ்சம் வழங்க விரும்பாத கதிர்வேல், இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழங்கிய ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை வி.ஏ.ஓ.,விடம் கதிர்வேல் கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், வி.ஏ.ஓ., ரேவதியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, லஞ்ச பணத்தை பதுக்கி வைத்துள்ளாரா? என்று அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Advertisement