புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்குபட்டா வழங்க அளவீடு பணி தீவிரம்
புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்குபட்டா வழங்க அளவீடு பணி தீவிரம்
ராசிபுரம்:தமிழகத்தில், ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் நபர்களுக்கு, பட்டா வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மாநிலம் முழுவதும், 86,000 பேருக்கு இந்த திட்டத்தில் பட்டா வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆறு மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டும் என, வருவாய்துறைக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும், முதல் கட்டமாக பயனாளிகளை வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., ஆகியோர் தேர்வு செய்து அனுப்பியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகாவில் வெண்ணந்துார் பகுதியில் அதிகபட்சமாக, 95 பேர் விண்ணப்பித்துள்ளனர். முத்துகாளிப்பட்டி ஊராட்சியில், 23 பேர், ராசிபுரம், 21, ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், 12, நாமகிரிப்பேட்டை, 14, அத்தனுார், 3, ஆர்.புதுப்பாளையம், 5, கட்டனாச்சினம்பட்டி, 22, பிள்ளாநல்லுார், 9, கோனேரிப்பட்டி, 39, சி.எஸ்.புரம், 46, அணைப்பாளையம், 1, அரியாகவுண்டம்பட்டி, 7, வெள்ளக்கல்பட்டியில், 5 பேர் என மொத்தம், 302 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் ராசிபுரம் நகராட்சியில், 60 பேர், நகராட்சியில் இருந்து, 8 கி.மீ., அப்பால் உள்ள பகுதியில், 97 பேர், டவுன் பஞ்சாயத்தில், 145 பேர் என பிரிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாம் கட்டமாக, குறிப்பிட்ட இடத்தில் குடியிருப்பவர்களுக்கு ஆட்சேபனை இல்லையா என்பதை, தாசில்தார் அளவிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தற்போது, பட்டா கேட்கப்படும் இடங்களை சர்வேயர் மூலம் அளவீடு செய்யும் பணி வேகமாக நடந்து வருகிறது.
மேலும்
-
உலகின் மிக விலை உயர்ந்த நாய்; 50 கோடி ரூபாய்க்கு வாங்கிய இந்தியர்!
-
முதல்வரின் வெளிநாடு பயணத்திற்கு ரூ.7 கோடி செலவு; சந்தேகம் கிளப்பும் துபாய் பயணச்செலவு
-
தமிழக அரசை கண்டித்து போராட்டம் அறிவித்தார் அண்ணாமலை
-
சட்டசபையில் கூட்டல் கழித்தல் கணக்கு; வானதி சிரிப்புக்கு விளக்கம் சொன்ன அமைச்சர்!
-
நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு; மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கைது
-
கேள்விகளும், பதில்களும் சுருக்கமாக இருக்கணும்; அப்பாவு 'அட்வைஸ்'