கேள்விகளும், பதில்களும் சுருக்கமாக இருக்கணும்; அப்பாவு 'அட்வைஸ்'

சென்னை: 'சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்களுக்கு, கேள்விகளும், அதற்கான அமைச்சர்களின் பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும்' என சபாநாயகர் அப்பாவு அறிவுரை வழங்கி உள்ளார்.
இது குறித்து சட்டசபையில், அப்பாவு பேசியதாவது:
அமைச்சர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். வினாக்கள் விடைகள் நேரத்தில் என்ன கேள்வியோ அதற்கான பதிலை சுருக்கமாக அமைச்சர்கள் சொல்ல வேண்டும். என்ன கேள்வி கேட்கிறார்களோ, அதனை உள்வாங்கி பதில் அளித்தால் நன்றாக இருக்கும்.
இன்று முதல் கேள்வி நேரத்தை 9.30 மணியிலிருந்து 10.30 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். காரணம் தொடர்ச்சியாக அலுவல் நேரம் காலம் தாழ்த்தி போகுவது வேதனைக்குரியதாக இருக்கிறது.
ஆகவே, இன்று முதல் அமைச்சர்களும், உறுப்பினர்களும் சுருக்கமாக பேச வேண்டும். கருணாநிதி வழியில் அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.








மேலும்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: சென்னை அணி பவுலிங்
-
விஜய் எத்தனை முறை மக்களை சந்தித்தார்: அண்ணாமலை கேள்வி
-
போலீசாருக்கு எதிரான புகாரை மீண்டும் விசாரிக்கணும்: மனித உரிமை ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு
-
மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: 2 சதவீத அகவிலைப்படி உயர்வு
-
நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு நீதித்துறை பணிகள் ஒதுக்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
உங்கள் சூழ்ச்சி ஒருபோதும் நிறைவேறாது: எதிர்க்கட்சிகளுக்கு சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்