இடையகோட்டைக்கு மினி பஸ்இயக்க மக்கள் வேண்டுகோள்
இடையகோட்டைக்கு மினி பஸ்இயக்க மக்கள் வேண்டுகோள்
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அரசு போக்குவரத்து கிளை சார்பாக, இடையகோட்டைக்கு மினி பஸ் இயக்கப்பட வேண்டும்.
அரவக்குறிச்சியில் இருந்து, இடையகோட்டை வரை மொண்டியூத்தாங்கரை, தண்ணீர்பந்தல், குமாரபாளையம், வெங்கடாபுரம், பாறையூர் வழியாக மினி பஸ் இதுவரை இயக்கப்படவில்லை. மேலும் இப்பகுதி கிராமங்கள், போக்குவரத்து வசதியின்றி உள்ளது. இப்பகுதியில் இருந்து கட்டட தொழிலாளர்கள், பெயின்ட் அடிப்போர், கூலித் தொழிலாளர்கள், மாணவர்கள் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி வரும் முதியவர்கள் என பலரும், மூன்று கி.மீ., துாரம் நடந்து, மெயின் ரோடு பகுதிக்கு வந்து, பஸ் ஏற வேண்டிய சிரமமான சூழ்நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பயணம் செய்ய சிரமப்படுகின்றனர். மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதிலும் சிரமம் உள்ளதாக தெரிவிக்கின்றனர். எனவே அரவக்குறிச்சியில் இருந்து, இடையகோட்டை வரை, அரவக்குறிச்சியில் உள்ள அரசு போக்குவரத்து கிளை மூலமாக, பொதுமக்கள் நலன் கருதி, மினி பஸ்கள் இயக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
வெடித்துச்சிதறிய பாலி எரிமலை: சர்வதேச விமான சேவை ரத்து
-
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்கள், நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறதாம்; கூட்டல் கழித்தல் கணக்குக்கு இ.பி.எஸ்., பதிலடி
-
கர்நாடகா சட்டசபையில் களேபரம் ; சபாநாயகர் மீது காகிதங்களை வீசி அமளி!
-
பல்லடத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
-
உலகின் மிக விலை உயர்ந்த நாய்; 50 கோடி ரூபாய்க்கு வாங்கிய இந்தியர்!