புது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தாசரி குன்னத்துார்வாசிகள் கோரிக்கை

சிங்கபெருமாள் கோவில்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், குருவன்மேடு ஊராட்சி, தாசரி குன்னத்துார் ஊராட்சியில், 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, 25 ஆண்டுகளுக்கு முன், இந்த பகுதியில் உள்ள குளக்கரை அருகில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, குழாய்கள் வாயிலாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு, தண்ணீர் கசிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.
சிமென்ட் பூச்சுகள் உதிர்த்து, உள்ளே இருக்கும் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உடைந்தால், கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, இந்த பகுதியில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
வெடித்துச்சிதறிய பாலி எரிமலை: சர்வதேச விமான சேவை ரத்து
-
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்கள், நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறதாம்; கூட்டல் கழித்தல் கணக்குக்கு இ.பி.எஸ்., பதிலடி
-
கர்நாடகா சட்டசபையில் களேபரம் ; சபாநாயகர் மீது காகிதங்களை வீசி அமளி!
-
பல்லடத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
-
உலகின் மிக விலை உயர்ந்த நாய்; 50 கோடி ரூபாய்க்கு வாங்கிய இந்தியர்!