உங்கள் சூழ்ச்சி ஒருபோதும் நிறைவேறாது: எதிர்க்கட்சிகளுக்கு சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை:நீங்கள் செய்ய நினைக்கும் கதையாடல்களுக்கு பின்னால் இருக்கும் சூழ்ச்சி ஒருபோதும் நிறைவேறாது என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு:
தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்திருக்கிறதா - குறைந்திருக்கிறதா என்பதைப் புள்ளிவிவரங்கள் சொல்லும்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலங்கள் போல் சாதி - மத மோதல்கள் நிகழ்ந்துள்ளனவா? குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்களா?
சட்டம் - ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் தமிழகத்தை நோக்கி முதலீடுகள் வந்து குவிகின்றன.
சட்டம் ஒழுங்குப் பிரச்னைகளைப் பூதாகரமாக்கி, மக்களைக் குழப்பவும் - திசைதிருப்பவும் எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. அவர்களின் தீய எண்ணத்துக்குச் சில ஊடகங்களும் துணை போவது வேதனையளிக்கிறது.
நீங்கள் செய்ய நினைக்கும் கதையாடலுக்கு பின்னால் இருக்கும் சூழ்ச்சி ஒருபோதும் நிறைவேறாது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.











மேலும்
-
மியான்மர் நிலநடுக்கம்; மசூதிகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்த சோகம்!
-
ஐதராபாத் பல்கலையில் மாணவர்கள் - போலீஸ் மோதல்; தெலுங்கானாவில் தொடரும் பதற்றம்
-
காங்., எம்.பி., பிரியங்கா வாகனத்தை வழி மறித்த சேட்டை வாலிபர் கைது
-
இந்தியா-பிரேசில் கால்பந்தாட்ட போட்டி
-
வக்பு வாரிய சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம்; அஜ்மீர் தர்கா தலைவர் அறிவிப்பு
-
திட்டக்குடியில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு; வி.சி.க., மாவட்ட பொருளாளர் தப்பியோட்டம்