போலீசாருக்கு எதிரான புகாரை மீண்டும் விசாரிக்கணும்: மனித உரிமை ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: போலீசுக்கு எதிராக அ.தி.மு.க., மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அளித்த புகாரை விசாரிக்காமல் முடித்து வைத்த மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
2022ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின் போது தி.மு.க., பிரமுகரை தாக்கியதாக அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவானது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.
கைது நடவடிக்கையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஜெயக்குமார், அவரது மகனும் மாஜி எம்.பி.,யுமான ஜெயவர்தன் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம, இருவர் அளித்த புகார்களையும் முடித்து வைத்தது.
இதை எதிர்த்து ஜெயக்குமார் தரப்பில், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், போலீசுக்கு எதிராக அளித்த புகாரை விசாரிக்காமல் முடித்து வைத்த மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை ரத்து உத்தரவிட்டுள்ளது.
ஜெயக்குமார் அளித்த புகாரை மனித உரிமைகள் ஆணையம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கோர்ட் ஆணையிட்டுள்ளது.
மேலும்
-
காங்., எம்.பி., பிரியங்கா வாகனத்தை வழி மறித்த சேட்டை வாலிபர் கைது
-
இந்தியா-பிரேசில் கால்பந்தாட்ட போட்டி
-
வக்பு வாரிய சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம்; அஜ்மீர் தர்கா தலைவர் அறிவிப்பு
-
திட்டக்குடியில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு; வி.சி.க., மாவட்ட பொருளாளர் தப்பியோட்டம்
-
குழந்தைகளே நன்கு படியுங்க, விளையாடுங்க: முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்
-
பாங்காக்கில் 30 மாடி கட்டடம் சரிந்து விழுந்ததில் சீன நிறுவனத்திற்கு சிக்கல்; ஆவணங்களை அகற்ற வந்ததாக 4 பேர் கைது