தீயில் இருந்து பணம், நகையை எந்தெந்த வழிகளில் காப்பாற்றலாம்?
''வீடுகளில் பணம், நகைகள், பத்திரங்கள் போன்ற பொருட்களை பாதுகாப்பாக வைப்பவர்கள், அதற்கான தீ தடுப்பு சாதனங்களை முறையாக பயன்படுத்த வேண்டும்,'' என, கட்டட அமைப்பியல் பொறியாளர் பாலமுருகன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலக வளாகங்கள் கட்டும்போது, அதில் உட்புற அளவில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க, 'ஸ்பிரிங்லர்' போன்ற கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு அறையிலும் இந்த கருவியையும், 'ஸ்மோக் டிடெக்டர்' எனப்படும் புகை உணரும் கருவியையும் அமைப்பது அவசியம்.
தீப்பிடிக்காத தன்மையுடன், 'லாக்கர்'கள் பல்வேறு அளவுகளில் வந்து விட்டன. பிரபல நிறுவனங்கள் தயாரிப்பில், 60,000 முதல், 5 லட்சம் ரூபாய் வரை பல்வேறு விலைகளில் இந்த லாக்கர்கள் கிடைக்கின்றன. மர அலமாரியில் விலை உயர்ந்த பொருட்களை வைக்காமல், இரும்பில் உருவாக்கப்பட்ட பீரோக்கள் மற்றும் லாக்கரில் வைக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
அது ஒரு அர்த்தமில்லாத கூட்டம்: முதல்வர் நடத்திய கூட்டம் பற்றி சீமான் விமர்சனம்
-
பாளையம் அண்ணா
-
ஆக்ஸ்போர்டு பல்கலை செல்லும் மம்தா: பெருமைக்குரிய விஷயம் என்கிறார் கவர்னர்
-
ரஹானே - நரேன் அதிரடி; கோல்கட்டா அணி மளமளவென ரன் குவிப்பு
-
எம்.எல்.ஏ., எண்ணிக்கையை அதிகரித்தாலே போதும்; பி.ஆர்.எஸ்., கட்சி
-
குழந்தை திருமணங்கள்: ஒடிசாவில் தொடரும் அவலம்!