பணிநீக்கமே சரியான நடவடிக்கை!
பொதுவாக உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிகள், குற்றச்சாட்டுகளில் சிக்கும்போது, அவர்களை பணிநீக்கம் செய்யும் அதிகாரம் என்பது, பார்லிமென்டிற்கு தான் உள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நீதிபதிகளுக்கு எதிராக, பார்லிமென்டில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அது நிறைவேற்றப்பட வேண்டும்.
இல்லையெனில், குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நீதிபதிகளுக்கு எதிராக, பார்லிமென்ட் தாமே இவ்விவகாரத்தை கையில் எடுக்கலாம் அல்லது மூன்று பேர் இடம் பெறும் விசாரணை குழுவை, உச்ச நீதிமன்றம் அமைக்கும். அந்த குழு அறிக்கையை, உச்ச நீதிமன்றம் பார்லிமென்ட்டுக்கு அனுப்பும். அதன் அடிப்படையில் நடவடிக்கை இருக்கும். இதுதான் நடைமுறை.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில், கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரம் என்பது பெரிய குற்றம். சம்பந்தப்பட்ட நீதிபதி மீது நடவடிக்கை தேவை. பணியிட மாற்றம் நடவடிக்கை என்பது போதாது; அது, ஏற்புடையதல்ல. உச்ச நீதிமன்றமே, அந்த நீதிபதிக்கு எதிராக பணிநீக்க நடவடிக்கையை முன்னெடுக்கும் என, நான் மட்டுமல்ல, அனைவரும் எதிர்பார்க்கின்றனர். நீதிபதி ஒருவர் வீட்டில், கணக்கில் வராத பணக்குவியல் எப்படி வருகிறது? எனவே, அவர் மீதான பணிநீக்க நடவடிக்கை என்பதே சரியாக இருக்கும். அவர் மீதான விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டும் வரை, பணியிட மாற்றம் செய்யப்பட்ட இடத்தில், அவருக்கு நீதிமன்ற பணி எதையும் ஒதுக்கீடு செய்யக்கூடாது.
- டி.ஹரிபரந்தாமன்,
ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.

மேலும்
-
அது ஒரு அர்த்தமில்லாத கூட்டம்: முதல்வர் நடத்திய கூட்டம் பற்றி சீமான் விமர்சனம்
-
பாளையம் அண்ணா
-
ஆக்ஸ்போர்டு பல்கலை செல்லும் மம்தா: பெருமைக்குரிய விஷயம் என்கிறார் கவர்னர்
-
ரஹானே - நரேன் அதிரடி; கோல்கட்டா அணி மளமளவென ரன் குவிப்பு
-
எம்.எல்.ஏ., எண்ணிக்கையை அதிகரித்தாலே போதும்; பி.ஆர்.எஸ்., கட்சி
-
குழந்தை திருமணங்கள்: ஒடிசாவில் தொடரும் அவலம்!