மினி டைடல் பார்க் சாலையில் மின் விளக்கு பொருத்த உத்தரவு

வானுார், வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட மயிலம் சாலையில் வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் மினி டைடல் பார்க் இயங்கி வருகிறது.

மெயின் ரோட்டில் இருந்து அரை கி.மீ., துாரத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் செயல்பட்டு வருகின்றன.

இப்பகுதிக்குச் செல்லும் சாலையில் தெரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், சாலையோரம் முட்புதர்கள் மண்டி இருப்பதோடு, தெரு மின் விளக்கு வெளிச்சமும் குறைவாக இருப்பதாக கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் ராஜா, அதிகாரிகளுடன் சென்று அப்பகுதியில் ஆய்வு நடத்தினார்.

அப்போது, சாலையோரம் இருக்கும் முட்புதர்களை உடனடியாக அகற்ற வேண்டும், கல்வி நிறுவனம், மினி டைடல் பார்க் செயல்பட்டு வருவதால் அப்பகுதியில் பணியாளர்கள், அச்சமின்றி சென்று வரும் வகையில் கூடுதல் மின் விளக்குகளை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆய்வின் போது, உதவி செயற் பொறியாளர் பெருமாள், உதவி பொறியாளர் காமராஜ், வானுார் பி.டி.ஓ., கார்த்திகேயன், திருச்சிற்றம்பலம் ஊராட்சி தலைவர் வெங்கடேசன் உடனிருந்தனர்.

Advertisement