இன்று இனிதாக பெங்களூரு

ஆன்மிகம்

தேய் பிறை அஷ்டமி

 தேய்பிறை அஷ்டமியை ஒட்டி கால பைரவருக்கு அபிஷேகம் - காலை 8:30 மணி; மஹா மங்களராத்தி - காலை 10:45 மணி. இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜிநகர்.

 சத்ரு சம்ஹாரா ஹோமம் - காலை 8:30 மணி; அபிஷேகம் - காலை 10:00 மணி; ஆரத்தி - காலை 11:00 மணி; கால பைரேஸ்வருக்கு அபிஷேகம் - மாலை 5:30 மணி; மஹா மங்களராத்தி - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ ரேணுகா துர்கா பரமேஸ்வரி கோவில், வீரபிள்ளை தெரு, சிவன்ஷெட்டி கார்டன்.

சண்டி மஹா யாகம்

 புதுக்கோட்டை ஸ்ரீசுயம் பிரகாச அவதுாத சதாசிவ அறக்கட்டளையுடன் புவனேஸ்வரி பக்த மண்டலி இணைந்து நடத்தும் ஸ்ரீ மங்கள சண்டி மஹா யாகம் - நேரம்: மாலை 4:30 முதல் இரவு 8:00 மணி வரை. மேலும் தகவலுக்கு 94480 94929. இடம்: மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், கங்காதர செட்டி சாலை, ஹலசூரு.

பொது

ருத்ராட்சை கண்காட்சி

 'ருத்ரா லைப்' அமைப்பு சார்பில் ருத்ராட்சை கண்காட்சி - காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: தி கேபிடள் ஹோட்டல், ராஜ்பவன் சாலை, பெங்களூரு.

உலக தண்ணீர் தினம்

 தங்கவயல் தாலுகா சட்ட சேவை குழு, வக்கீல்கள் சங்கம், கர்நாடக மாநில குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியம் சார்பில் 'உலக தண்ணீர் தினம்' விழிப்புணர்வு கூட்டம் - காலை: 10:00 மணி; இடம்: நகராட்சி கூட்ட அரங்கம், ராபர்ட்சன்பேட்டை.

பயிற்சி

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

 சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

 எம்பிராய்டிங் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

காமெடி

 நமித் ஜெயின், அம்ருதா, ஆயுஷின் வீக்டே காமெடி - இரவு 7:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், தீனா காம்ப்ளக்ஸ், முதல் தளம், பிரிகேட் சாலை.

 பிரணாய் சவுத்ரி, தாரல் ஷாவின் காமெடி ஸ்பெஷல் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, 100 அடி சாலை, ஜே.பி., நகர்.

 கவரவ் புரோஹித், சமர்பன் போஸ், ஆகாஷ் நாத்தின் 'ஜோக்ஸ் இன் ஏ பங்கர்' காமெடி ஷோ - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, இந்திரா நகர்.

 ரஜத் சூத் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: 1 பார் ஹவுஸ், 56, ஐந்தாவது குறுக்கு, 60 அடி சாலை, கோரமங்களா.

 பஞ்ச் லைன் புரொடக்ஷன்ஸ் வழங்கும் ஜோக் இன் புராகிரஸ் - இரவு 8:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

 இன் தி நைட் ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: கேப் முஸ்ரிஸ், 49, ஒன்பதாவது பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.

 நவீன் குமார், சங்கர் சுகனி, ரவி ராவின் இங்கிலீஷ் ஸ்டாண்ட் அப் - 10:30 முதல் 11:45 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

 கவுரவ் கபூர், விஜய் யாதவ், பிரத்யூஷ், மிட் நைட் காமெடி - இரவு 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன், இரண்டாவது தளம், அசோக் நகர்.

Advertisement