லண்டன் தீ விபத்தில் சதியில்லை; 18 மணி நேரத்திற்கு பிறகு விமான சேவை துவக்கம்!

லண்டன்: லண்டன் ஹீத்ரூ மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால், விமான நிலைய சேவை முடங்கியது. தற்போது 18 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் விமான சேவை துவங்கியது.
லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையம் சர்வதேச அளவில் அதிக விமானங்கள் வந்து செல்லும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று. நாள் ஒன்றுக்கு, 2 லட்சம் பயணியர் இந்த விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், ஹீத்ரூ விமான நிலையத்திற்கான மின் வினியோகம், அருகில் உள்ள துணை மின்நிலையத்தில் இருந்து வழங்கப்படுகிறது. இந்த துணை மின் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுற்றுவட்டார பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
தரையிறங்க வேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.
புறப்பட வேண்டிய விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. வருகை மற்றும் புறப்பாடுக்கு காத்திருந்த 1,350 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. தற்போது தீ கட்டுக்குள் வந்துள்ள நிலையில், 18 மணி நேரத்திற்கு பிறகு விமான சேவை துவங்கியது.
இந்த தீ விபத்திற்கு சதி செயல் காரணம் இல்லை. விமான நிலையத்தில் சோதனை செய்தபோது சந்தேகப்படும் வகையில் எந்த பொருளும் சிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

மேலும்
-
கடப்பாரையுடன் சென்று வரி வசூல்; கடலுார் மாநகராட்சியில் அடாவடி!
-
கூட்டாட்சி பாதுகாக்கப்பட வேண்டும்: தொகுதி மறுவரையறை கூட்டத்தில் கர்நாடகா துணை முதல்வர் பேச்சு
-
ஆன்லைன் சூதாட்டத்தால் 84 பேர் தற்கொலை; அரசு கணக்கு தவறு என ராமதாஸ் புகார்
-
கொலையாளிகளுக்கு தகவல் கொடுத்த பள்ளி மாணவன்: ஜாகிர் உசேன் கொலையில் அதிர்ச்சி!
-
100 சதவீதம் ஒத்துழைப்பு; தொகுதி மறுவரையறை கூட்டுக்குழுவில் ஸ்டாலினுக்கு பஞ்சாப் முதல்வர் உறுதி
-
தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநிலங்களுடன் பேசுங்க: மத்திய அரசுக்கு கேரளா முதல்வர் வலியுறுத்தல்