துணை முதல்வர் சிவக்குமாருக்கு வாழ்த்து; வஞ்சப்புகழ்ச்சியில் சொன்னார் அண்ணாமலை!

சென்னை: கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமாருக்கு, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, வஞ்சப்புகழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்தார்.
தொகுதி மறு வரையறை தொடர்பாக தி.மு.க., இன்று (மார்ச் 22) சென்னையில் நடத்தும் கூட்டு நடவடிக்கை கூட்டத்தில் பங்கேற்க பஞ்சாப், கேரளா, தெலுங்கானா முதல்வர்கள் வந்தனர். கூட்டத்தில் பங்கேற்க கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமாரும் வந்திருந்தார்.
கூட்டாட்சி முறை
சென்னை விமான நிலையத்தில் கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் கூறியதாவது:
தொகுதி மறு வரையறை விவகாரத்தில், முதல் அடியை எடுத்து வைத்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறேன். அவர், இந்திய நாட்டின் அரசியல் அமைப்பையும், கூட்டாட்சி முறையையும் பாதுகாக்க மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்காக பெருமைப்படுகிறேன்.
இது ஒரு துவக்கம் மட்டுமே.
கருப்புக் கொடி
நமது தொகுதிகள் குறைக்கப்படுவதை என்ன விலை கொடுத்தேனும் தடுப்போம்.
பொருளாதார ரீதியாகவும், கல்வியிலும் நாம் வேகமாக முன்னேறி உள்ளோம். ஒற்றுமையாய் இருந்து நமது தொகுதிகள் எதுவும் குறைக்கப்படாமல் பாதுகாப்போம். பா.ஜ., கட்சியினர் கருப்புக் கொடி காட்டுவதை வரவேற்கிறேன். அவர்கள் என்னை திகார் சிறைக்கு அனுப்பினாலும் பயப்பட மாட்டேன். இவ்வாறு சிவகுமார் கூறினார்.
சிவக்குமார் வருகை எதிர்த்து பா.ஜ., நடத்திய கருப்புக்கொடி போராட்டம் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். ''அண்ணாமலைக்கு என் பலம் என்னவென்று தெரியும். அவர் கர்நாடகாவில் பணியாற்றியவர் தான். அவர், அவரது வேலையை செய்யட்டும். அவருக்கு என் வாழ்த்துக்கள்,'' என்று துணை முதல்வர் சிவக்குமார் கூறினார்.
அண்ணாமலை பதிலடி
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பதிவிட்ட பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ''எனக்கு வாழ்த்து கூறிய உங்களுக்கு மிகுந்த நன்றி. சித்தராமையாவை கவிழ்த்து விட்டு கர்நாடகா முதல்வராக முயற்சிக்கும் உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்,'' என்று கூறியுள்ளார்.










மேலும்
-
கடப்பாரையுடன் சென்று வரி வசூல்; கடலுார் மாநகராட்சியில் அடாவடி!
-
கூட்டாட்சி பாதுகாக்கப்பட வேண்டும்: தொகுதி மறுவரையறை கூட்டத்தில் கர்நாடகா துணை முதல்வர் பேச்சு
-
ஆன்லைன் சூதாட்டத்தால் 84 பேர் தற்கொலை; அரசு கணக்கு தவறு என ராமதாஸ் புகார்
-
கொலையாளிகளுக்கு தகவல் கொடுத்த பள்ளி மாணவன்: ஜாகிர் உசேன் கொலையில் அதிர்ச்சி!
-
100 சதவீதம் ஒத்துழைப்பு; தொகுதி மறுவரையறை கூட்டுக்குழுவில் ஸ்டாலினுக்கு பஞ்சாப் முதல்வர் உறுதி
-
தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநிலங்களுடன் பேசுங்க: மத்திய அரசுக்கு கேரளா முதல்வர் வலியுறுத்தல்