வாலிபரை கொலை செய்தவருக்கு ஆயுள்   சிவகங்கை விரைவு நீதிமன்றம் தீர்ப்பு  

சிவகங்கை : மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் கண்ணன், 21 என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்து, வைகை ஆற்றிற்குள் போட்டு சென்ற அரியசாமிக்கு 23, ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து சிவகங்கை விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விருதுநகர் மாவட்டம், உளுத்திமடை மனோகரன் மகன் கண்ணன் 21. மடப்புரத்தில் வசித்து வந்தார். 2010 ஏப்., 30 ம் தேதி மானாமதுரையில் நடந்த சித்திரை திருவிழாவிற்கு சென்றிருந்தார். அங்கு இவருக்கும், மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் காலனியை சேர்ந்த அழகர் மகன் அரியசாமி 23, க்கும் தகராறு ஏற்பட்டது. இதில், கண்ணன் மற்றும் அவரது ஆட்கள் அரியசாமியை தாக்கினர். இந்த விரோதம் காரணமாக அரியசாமி தலைமையில் 15 பேர் கொண்ட கும்பல் கண்ணார் தெரு அருகே வைகை ஆற்றிற்குள் கண்ணனை விரட்டினர்.அப்போது ஏற்பட்ட தகராறில் அரியசாமி தரப்பினர் கத்தியால் குத்தியதில் கண்ணன் பலியானார்.

அரியசாமி மற்றும் 3 சிறுவர்கள் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணை இடையே இருவர் இறந்துவிட்டனர். சிறுவர் 3 பேரின் வழக்கு தனியாக நடக்கிறது.

சிறார்கள் தவிர்த்து மற்ற 12 பேரில் அரியசாமி மற்றும் இறந்த இருவர் தவிர்த்து, 9 பேரையும் விடுவித்தும், அரியசாமிக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால், மேலும் 6 மாத கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி கோகுல் முருகன் தீர்ப்பளித்தார்.

Advertisement