கஞ்சா விற்ற 3 பேர் கைது

திருப்பூர் : திருமுருகன்பூண்டி போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் பிடிபட்டனர்.

அவிநாசி அருகே நல்லிக்கவுண்டம்பாளையம் கிராமத்தில், கஞ்சா விற்பனை நடப்பதாக, திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர். அதில், ராஜ்குமார், 24 என்பவர் கஞ்சா விற்பனை செய்து போலீசில் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தி, அவர் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தினர்.

அங்கிருந்த பீகாரைச் சேர்ந்த நித்திஷ்குமார், 27 மற்றும் சூரஜ்குமார், 20 ஆகியோரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வகையில், மூன்று பேரிடமும் மொத்தம், 4.7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி, மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர்.

Advertisement