காவிரி ஆறு அசுத்தமடைவதை தடுப்போம்; துணை முதல்வர் சிவகுமார் தகவல்

குடகு; “காவிரி ஆறு அசுத்தமடைவதை தடுக்கவும், ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது,” என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
குடகு மாவட்டம், பாகமண்டலாவின் பகண்டேஸ்வரர் கோவிலுக்கு, துணை முதல்வர் சிவகுமார் நேற்று காலை சென்றிருந்தார். காவிரி ஆற்றில் புனித நீராடினார். கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
காவிரி ஆறு அசுத்தமடைவதையும், ஆற்றை ஒட்டி உள்ள ஆக்கிரமிப்புகளையும் கட்டுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்கும். இதற்காக தனிக்குழு அமைக்கப்படும். உலக ஜல தினத்தை முன்னிட்டு, ஒரு வார காலம், நீரை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
தண்ணீர் வீணாவதை தடுத்து, நல்ல முறையில் பயன்படுத்தும்படி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே, காவிரி ஆரத்தியின் நோக்கம்.
பொது மக்கள் நீரை மிச்சப்படுத்துவோம் என, ஆன்லைன் மூலம் உறுதி மொழி எடுத்துக் கொண்டு, சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்யலாம். இதில் அரசியல்வாதிகளும் பங்கேற்கலாம்.
இதற்கு முன்பு நானும், சித்தராமையாவும் பல்வேறு தலைவர்களின் தலைமையில், மேகதாது திட்டத்தை வலயுறுத்தி பாதயாத்திரை நடத்தினோம்.
இந்த நிலம், நீர், வரலாறு, பாரம்பரியத்தை காப்பாற்ற, என்ன செய்ய வேண்டுமோ, அதை நாங்கள் செய்வோம். ஊடகங்கள் ஆலோசனை கூறினாலும் ஏற்போம். பெங்களூரில் காவிரி ஐந்தாம் கட்ட திட்டம் முடிந்துள்ளது. காவிரி ஆற்றால் இது சாத்தியமானது.
கடந்த ஆண்டு நல்ல மழை பெய்தது. அதேபோன்று நடப்பாண்டும் நல்ல மழை பெய்து, மக்களின் வாழ்க்கை செழிப்பாக வேண்டும் என, பிரார்த்தனை செய்து, தலக்காவிரியில் பூஜை செய்தேன்.
குடகில் பாயும் காவிரி நீர், பெங்களூரு மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவுக்கும், தமிழகத்துக்கும் உயிர்நாடியாக உள்ளது. இது தென்னகத்தின் ஜீவநதி.
முதல் பூஜை தலக்காவிரியில் செய்ய வேண்டும். எனவே இங்கிருந்து புனித நீர் கொண்டு சென்று, காவிரி ஆரத்தி நடத்தப்படுகிறு.
லோக்சபா தொகுதிகள் மறு சீராய்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று ஆலோசனை கூட்டம் அழைத்துள்ளார். அந்த கூட்டத்தில் நானும் பங்கேற்பேன். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் பங்கேற்கவுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக்குழு கூட்டம் துவக்கம்
-
இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
தமிழகம் முழுவதும் தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., கருப்புக்கொடி போராட்டம்
-
தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.65,840!
-
காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு
-
தவறான கணக்கீட்டை காட்டிய மின் மீட்டர்: நிரூபித்து இழப்பீடு பெற்ற சென்னை பெண்மணி