சாலை பணிகளை விரைந்து முடிக்க பா.ஜ., வலியுறுத்தல்
திருப்பூர் : திருப்பூர், பார்க் ரோட்டில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, பா.ஜ., சார்பில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பா.ஜ., ராயபுரம், மண்டல தலைவர் மாதேஸ்வரன், திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தியிடம், சாலை பணி மற்றும் தெருவிளக்கு அமைத்து தரக்கோரி அளித்த மனு:
திருப்பூரில், புஷ்பா தியேட்டர் பஸ்ஸ்டாப், பெண்கள், கல்லுாரி மாணவ, மாணவியர் அதிகம் பயன்படுத்தும் பகுதியாக உள்ளது. அருகிலேயே, ரயில்வே ஸ்டேஷன், 24 மணி நேரமும், மக்கள் போக்குவரத்தால் பரபரப்பாக காணப்படுகிறது.
புஷ்பா பஸ்ஸ்டாப் பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அப்பகுதியில் தெருவிளக்குகள் அமைத்துத்தர வேண்டும்.
பார்க் ரோட்டிலுள்ள மாநகராட்சியின் வெள்ளி விழா பூங்கா அருகே, ரோடு பணிகள் ஆண்டு கணக்கில் நடைபெற்றுவருகிறது.
காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. எனவே, ரோடு பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு, அம்மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு
-
தவறான கணக்கீட்டை காட்டிய மின் மீட்டர்: நிரூபித்து இழப்பீடு பெற்ற சென்னை பெண்மணி
-
போதைப்பொருள் கடத்தல்; இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் தமிழர்கள்
-
தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்; சென்னையில் கர்நாடகா துணை முதல்வர் பேட்டி
-
ஹரியானாவில் மீண்டும் ஒரு சம்பவம்: பிரபல அரசியல் கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை
-
லண்டன் தீ விபத்தில் சதியில்லை; 18 மணி நேரத்திற்கு பிறகு விமான சேவை துவக்கம்!