வேலை உறுதி திட்ட தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

பவ்லடம் : நான்கு மாதமாக சம்பளம் நிலுவையில் இருப்பதாக கூறி, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள், பல்லடம் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் பழனிசாமி, பரமசிவம் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

முன்னதாக, நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியும் வேலை செய்ததற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், அதிகாரிகளை கேட்டால் முறையான பதில் கூறுவதில்லை என்றும் குற்றச்சாட்டை முன்வைத்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நுாறு நாள் திட்டப் பணியாளர்கள் பலரும் பங்கேற்று கோஷங்கள் எழுப்பியபடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானப்படுத்தினர்.

Advertisement