முதல்வர் படம் ஒட்டிய பா.ஜ.,வினர் மீது வழக்கு
புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் டாஸ்மார்க் கடைகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் படம் ஒட்டிய, பா.ஜ.,வினர் 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
புதுச்சத்திரம் அடுத்த தியாகவல்லியை சேர்ந்தவர் பாலமுருகன், 55; புதுச்சத்திரம் டாஸ்மார்க் கடை எண்- 2526ல் மேற்பார்வையாளர்.
இவர், நேற்று முன்தினம் பணியில் இருந்த போது, கடலுார் மேற்கு மாவட்ட பா.ஜ., மகளிரணி தலைவர் அர்ச்சனா ஈஸ்வர், ஒன்றிய தலைவர் சுரேஷ், நிர்வாகிகள் ராகேஷ், வெங்கடேசன், அன்பரசன், சேகர், சந்தோஷ், ராதாகிருஷ்ணன், சுதா, வின்சென்ட் சர்ச், மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் டாஸ்மாக் கடையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தை ஓட்டினர்.
இதேப் போன்று, கடை எண்- 2539 லிலும் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டியுள்ளனர்.
புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார், மகளிரணி தலைவர் அர்ச்சனா ஈஸ்வர் உள்ளிட்ட 11 பேர் மீது, வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு
-
தவறான கணக்கீட்டை காட்டிய மின் மீட்டர்: நிரூபித்து இழப்பீடு பெற்ற சென்னை பெண்மணி
-
போதைப்பொருள் கடத்தல்; இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் தமிழர்கள்
-
தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்; சென்னையில் கர்நாடகா துணை முதல்வர் பேட்டி
-
ஹரியானாவில் மீண்டும் ஒரு சம்பவம்: பிரபல அரசியல் கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை
-
லண்டன் தீ விபத்தில் சதியில்லை; 18 மணி நேரத்திற்கு பிறகு விமான சேவை துவக்கம்!