சொத்து வரி குறைக்க வர்த்தக சங்கம் மனு

பரங்கிப்பேட்டை; உயர்த்தப்பட்ட குப்பை வரி, சொத்து வரி மற்றும் தொழில் உரிமைக் கட்டணங்கள் குறைக்கக் கோரி வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாகனனிடம், மாவட்ட வர்த்தக சங்க மண்டல தலைவர் சண்முகம், பரங்கிப்பேட்டை வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன் ஆகியோர் அளித்த மனு:

பரங்கிப்பேட்டை-கிள்ளை வெள்ளாற்று பாலம் சாலையை சீரமைக்க வேண்டும். உயர்த்தப்பட்ட குப்பை வரி, சொத்து வரி மற்றும் தொழில் உரிமைக் கட்டணங்களை மறு பரிசீலனை செய்து குறைக்க வேண்டும். நிர்வாகி ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement