அ.தி.மு.க., புதிய நிர்வாகிகள் 'மாஜி' அமைச்சரிடம் வாழ்த்து

பண்ருட்டி; தொரப்பாடி பேரூராட்சி அ.தி.மு.க., புதிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் சம்பத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பண்ருட்டி அடுத்த தொரப்பாடி அ.தி.மு.க., பேரூராட்சி செயலாளராக சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட செயலாளர் சம்பத் பரிந்துரைப்படி, பொதுச் செயலாளர் பழனிசாமி நியமித்துள்ளார்.
மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் கனகராஜ் தலைமையில், பேரூராட்சி செயலாளர் சுரேஷ் மற்றும் புதிய நிர்வாகிகள் நேற்று பண்ருட்டி, சித்திரைசாவடி திருமலை நகரில் உள்ள கடலுார் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர், முன்னாள் அமைச்சர் சம்பத் வீட்டிற்கு சென்று அவரிடம் வாழ்த்து பெற்றனர். பேரூராட்சி அவைத் தலைவர் சுந்தரம், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் ராமலிங்கம், பேரூராட்சி பொருளாளர் பன்னீர்செல்வம், துணைச் செயலாளர் சவுந்தர்ராஜன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் மண்ணாங்கட்டி, ஜெ.,பேரவை செயலாளர் தயாளன், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் புஷ்பராஜ், மகளிர் அணி செயலாளர் மீரா, மாணவரணி செயலாளர் சிவா, விவசாய பிரிவு செயலாளர் சக்திவேல், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஜெயராமன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண், வார்டு செயலாளர்கள் சதாசிவம், அய்யப்பன், ரவி, சபீர் குகன், ஆறுமுகம், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் சூர்யா, பேரூராட்சி இளைஞரணி தலைவர் வைரமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும்
-
தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை எண்ணிக்கையில் இல்லை; அதிகாரத்தில் தான்: முதல்வர் ஸ்டாலின்
-
இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
தமிழகம் முழுவதும் தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., கருப்புக்கொடி போராட்டம்
-
தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.65,840!
-
காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு
-
தவறான கணக்கீட்டை காட்டிய மின் மீட்டர்: நிரூபித்து இழப்பீடு பெற்ற சென்னை பெண்மணி