உலக வன தினம் விழிப்புணர்வு

விருத்தாசலம்; முருகன்குடி கிராமத்தில் உலக வன தினத்தை முன்னிட்டு, வேளாண் மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருவண்ணாமலை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கி, ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர்.

இவர்கள், உலக வன தினத்தை முன்னிட்டு முருகன்குடி கிராமத்தில் மா, சப்போட்டா மர கன்று களை நட்டு, காடுகளின் சிறப்புகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முன்னோடி இயற்கை விவசாயி முருகன், பாக்கியராஜ், பாரம்பரிய நெல் வகைகளை பயிரிடும் விவசாயி மணிவேல், சிலம்புச் செல்வி ஆகியோர் இயற்கை விவசாயத்தில் காடுகளின் பங்கு குறித்து எடுத்துரைத்தனர். விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement